பாக்கிஸ்தான் தூதரை சந்தித்து கலந்துரையாடிய தினேஷ்..! - Sri Lanka Muslim

பாக்கிஸ்தான் தூதரை சந்தித்து கலந்துரையாடிய தினேஷ்..!

Contributors
author image

Editorial Team

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன.

இலங்கையில் புர்க்கா அணிவதற்குத் தடை விதிக்கப் போவதாக சரத் வீரசேகர அறிவித்திருந்த நிலையில், அவ்வாறான செயற்பாடு இலங்கையை மேலம் பலவீனப்படுத்தும் என பாக். உயர்ஸ்தானிகர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தார்.

அதன் பின், அது வெறும் அமைச்சர் ஒருவரின் அபிப்பிராயம் மாத்திரம் தான் என சமாளித்துள்ள இலங்கையரசு நேற்றைய தினம் இச்சந்திப்பை அவசரமாக நடாத்தியுள்ளதுடன் இதன் போது, இம்ரானின் வருகையைத் தொடர்ந்த இரு நாட்டு உறவுகளை பலப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் பேசப்பட்டதாக அரசு விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team