பாக்கு ஏற்றுமதியில் மோசடி, சுங்க அதிகாரி கைது! - Sri Lanka Muslim

பாக்கு ஏற்றுமதியில் மோசடி, சுங்க அதிகாரி கைது!

Contributors

இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்த 23 பாக்கு கொள்கலன்களை இலங்கைப் பாக்கு என போலி ஆவணம் உருவாக்கி இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய முயன்ற மோசடியின் பின்னணியில் சுங்க அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2020 ஒக்டோபரில் சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான இந்தோனேசிய பாக்கு கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கான முயற்சி குறித்து அறிந்த குற்றவியல் விசாரணைப் பிரிவினர் அதனைத் தடுத்திருந்ததோடு மூவரை கைது செய்திருந்தனர்.

ஈற்றில், வாத்துவயைச் சேர்ந்த சுங்க அதிகாரியொருவரும் இதில் தொடர்புபட்டிருப்பது அறிந்து நேற்றைய தினம் குறித்த நபரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team