பாஜக தலைவர்களுடன் சென்னையில் பேச்சு நடத்தினார் சம்பந்தன்! - இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு. - Sri Lanka Muslim

பாஜக தலைவர்களுடன் சென்னையில் பேச்சு நடத்தினார் சம்பந்தன்! – இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு.

Contributors

தமிழக பாஜக தலைவர்களுடன் சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடத்தினார். பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினரும், தமிழ் ஆர்வலர்கள் சிலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும், இலங்கையில் வட மாகாண தேர்தல் முடிவடைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில் முதல் முறையாக தமிழக பாஜகவினரை சந்தித்து சம்பந்தன் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பை அடுத்து, பா.ஜ. அலுவலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழுமையாக சென்றடையவில்லை. இலங்கை தமிழர்களின் பிரச்னையை தீர்க்க இந்தியா தொடர்ந்து உதவிட வேண்டும். இந்த விவகரத்தில் இலங்கை அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. 13 வது அரசியல் சட்ட விவகாரத்தை இலங்கை அரசு முற்றிலுமாக கைவிடவில்லை. இதில் திருத்தத்தை மாற்றும் முயற்சி முற்றிலுமாக தடு்க்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்தியா தீவிரஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team