பாடசாலைகளில் ஒழுக்கக்கட்டுப்பாட்டைப் பேண காத்திரமான மாற்றீடுகள் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம்-இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் - Sri Lanka Muslim

பாடசாலைகளில் ஒழுக்கக்கட்டுப்பாட்டைப் பேண காத்திரமான மாற்றீடுகள் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம்-இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

Contributors
author image

M.M.A.Samad

பாடசாலைகளில் ஒழுக்கக்கட்டுப்பாட்டைப் பேண காத்திரமான மாற்றீடுகள் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

 

பாடசாலை மாணவர்கள், பாடசாலைகளின் ஒழுக்கக்கட்டுப்பாட்டை மீறும் சந்தர்ப்பங் களில், அவர்களுக்கு சரீர தண்டணை வழங்குவதைத் தவிர்ப்பதற்கு மாற்றீடாக அனுமதிக்கப்பட்டுள்ள செயலொழுங்குகள் காத்திரமானதாக இல்லாமையினாலும். முறையாக அமுல்படுத்தப்படாமையினாலும் பாடசாலைகளில் ஒழுக்கட்டுப்பாடென்பது கேள்விக் குறியாகியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

 

பாடசாலை மாணவர்கள், தாம் பாடசாலையில் கற்கும்காலத்தில் அறிந்தோ. அறியா மலோ செய்யும் தவறுகள், அவை பாடசாலையின் ஒழுக்கக்கட்டுப்பாட்டை மீறினாலும் மீறாவிட்டாலும் அவற்றிற்காக பாடசாலைகளில் வழங்கப்படும் தண்டணைகள் பாடசாலையின் ஒழுக்கக்கட்டுப்பாட்டைப் பேணுவதாகவோ, மாணவரை நல்வழிப்படுத்துவதாகவோ அமைவதாகக் காணப்படவில்லை.

 

மாறாக, பாடசாலையின் ஒழுக்கக்கட்டுப்பாட்டைச் சீர்குலைப்பதாகவும், மாணவரையும், சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவர்களையும் நீதி மன்றம் வரை இட்டுச்செல்வதையும், இறுதியில் மாணவர் நலன்ருதி  அவை கைவிடப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

 

இவ்வாறன சம்பவங்கள் பல நாட்டிலுள்ள பாடசாலைகள் பலவற்றில் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது.

 

இதற்கு பாடசாலைகளில் ஒழுக்கக்கட்டுப்பாட்டை மீறும் மாணவர்களுக்கான சரீர தண்டணைக்கு மாற்றீடாக அனுமதிக்கப்பட்டுள்ள ‘எச்சரிக்கை செய்தல், பெற்றோர் – பாதுகாவலருக்கு அறிவித்தல், பாடசாலை ஒழுக்கக்கட்டுப்பாட்டுச் சபையின் விசா ரணையின் பின்னரான தீpர்மானத்தில் சிறப்புரிமைகளை வரையறுத்தல் – இடை நிறுத்தல், அவ்வாறே பாரதூரமான ஒழுக்கக்கேடான செயல்களுக்கு பெற்றோருக்கு அறிவித்து இரு வாரங்களுக்குக்கூடாத வகுப்புத்தடை விதித்தல், மிகப் பாரதூரமான ஒழுக்கக்கேடான செயல்களுக்கு வலயக் கல்விப்பணிப்பாளரின் அனுமதியுடன் இருவாரங்களுக்கு மேற்பட்ட வகுப்புத்தடை விதித்தல் – வேறு பாடசாலைக்கு மாற்றுதல் போன்ற செயலொழுங்ககள் காத்திரமானமுறையில் அமுல் நடாத்தப்படாமையே பிரதான காரணம் எனலாம்.

 

இந்தச்செயலொழுங்குகள் சிற்சில சந்தர்ப்பங்களில் அமல்படுத்தப்பட்டாலும் வெற்றி யளித்தாகத் தெரியவில்லை. வெற்றியளித்திருந்தால், இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பங்கள் இடம்பெறாது தவிர்க்கப்பட்டிருக்கும்.

 

ஆகவே, இவ்வாறான சம்பங்களினால் ஏற்படும் விரும்பத்தாக விளைவுகளிலிருந்து; மாணவர்கள் மாத்திரமின்றி, அதிபர், ஆசிரியர் குழாமும் பாதுகாப்புப் பெற வேண்டுமானால், சரீர தண்டணைகளுக்கு காத்திரமான மாற்றீடுகள் அவசியமாகின்றது. ஆதலால், அரசும், கல்வி அமைச்சும் இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதே சங்கத்தின் கோரிக்கையாகும் என அக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team