பாடசாலைச் சீருடைகள் மற்றும் புத்தகங்கள் தொடர்பில் சீனா – இந்தியாவிடம் உதவி கோரும் இலங்கை..! - Sri Lanka Muslim

பாடசாலைச் சீருடைகள் மற்றும் புத்தகங்கள் தொடர்பில் சீனா – இந்தியாவிடம் உதவி கோரும் இலங்கை..!

Contributors

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் பாடநூல் புத்தகங்கள் தொடர்பில் சீனா மற்றும் இந்தியாவின் உதவியைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது.

இது தொடர்பாகக் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக்க தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன் பிரகாரம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை வழங்கத் ​தேவையான துணிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகச் சீனாவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றி பெற்றுள்ளதாகவும், தேவைப்படும் துணியில் பாதியளவு துணியை தந்துதவ சீனா இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பாடநூல்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசியை இந்தியாவிலிருந்து கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team