பாடசாலை சிற்றூழியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு - Sri Lanka Muslim

பாடசாலை சிற்றூழியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

Contributors
author image

ரசாட் முஹம்மட்

கிழக்கு மாகாண கல்வி சாரா சிற்றூழியர் சேவையின் பாடசாலை பணியாளர், பாடசாலை காவலாளி பதவிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (01.09.2014) கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் முதலமைச்சர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

மேற்படி 20 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கிழக்கு முதலமைச்சர் உரையாற்றுகையில் “1994ம் ஆண்டு நான் பாராளுமன்றம் தெரிவு  செய்யப்பட்டது முதல் ஏறத்தாள 600 இற்கும் மேற்பட்ட நேரடி நியமனங்கள் துறைமுக அதிகார சபை, போக்குவரத்து அதிகார சபை, வங்கி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, மின்சார சபை என பல துறைகளிலும் வழங்கப்பட்டுள்ளது.

 

 அந்த வரிசையில் கல்வித் திணைக்களத்தில் கல்வி சாரா ஊழியர்களுக்கான நியமனங்கள் இன்று என்னால் வழங்கப்படுவதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நியமனங்கள் முதற்கட்டமானது. இன்னும் ஓரிரு மாதங்களில் மேலும் பல நியமனங்கள் என்னால் வழங்கப்படவுள்ளது என்ற செய்தியையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.” என கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

 

நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்ட நியமனதாரிகள் முதலமைச்சருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் இந் நிகழ்வில் அல் கிம்மாஹ் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். ஹரூன் (சஹ்வி) மற்றும் நியமனதாரிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

 

26

 

27

 

28

 

29

 

30

 

Web Design by Srilanka Muslims Web Team