பாடசாலை மாணவர்களுக்கு உணவுப்பழக்க வழக்கங்கள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு..! - Sri Lanka Muslim

பாடசாலை மாணவர்களுக்கு உணவுப்பழக்க வழக்கங்கள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு..!

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

போசணை நிறை தேசிய ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  தொற்றா நோய்,உணவு பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு நேற்று நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய  மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) இடம் பெற்றது.

இன் நிகழ்வில் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம் நக்பர் விரிவுரையாளராக கலந்துகொண்டு கொவிட்-19, நஞ்சற்ற உணவுகள், தொற்றா நோய், சம்மந்தமாக விளக்கமளித்ததுடன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கும் தெளிவூட்டல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்று 17 அரச நிறுவனங்களில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த உள்ளதாக டாக்டர் கே.எல்.எம் நக்பர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team