பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு உதவிகளை வழங்குங்கள்: ஷரிஆ கவுன்சிலின் தலைவா் வேண்டுகோள் » Sri Lanka Muslim

பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு உதவிகளை வழங்குங்கள்: ஷரிஆ கவுன்சிலின் தலைவா் வேண்டுகோள்

hasbulla

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

ஸ்ரீலங்கா ஷரிஆ கவுன்சிலின்   தலைவா் மௌலவி ஹஸ்புல்லாஹ் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

   அஸ்ஸலாமு அலைக்கும்
 
ஸ்ரீலங்கா ஷரிஆ கவுன்சில்  அன்பான முஸ்லீம்களுக்கு விடுக்கும்  வேண்டுகோளானது  வல்ல அல்லாஹ் ”இன்னல்லாஹக மாஸபிரின் ” நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளா்களுடன் இருக்கின்றான்.  என்று கூறும்  அருள் மறையின் அமுத வாா்த்தை பல கஷ்டங்களுக்கும்  நஷ்டங்களுக்கும்  உட்பட்டவா்கள் மற்றும் பொறுமையுடனும் இருப்பவா்களுக்கும்  வெற்றியும்  நிம்மதியுமுண்டு என்பதை  தெளிவுபடுத்துகின்றது.

இந் நாட்டில் வாழும்  முஸ்லீம்களாகிய நாம்  சிங்களவா்கள், தமிழா்கள், கத்தோலிக்கா்கள்  என சகல இனத்துடன் தொன்று தொட்டு இணைந்து இந்த நாட்டின் சமாதான சகவாழ்வுக்காக  பெரும் பங்களிப்பு செய்துள்ளோம்.  என்ற உண்மையை  யாரும் மறக்கவோ மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இந்த வகையில் இன்று இந்த நெருக்கடியான சமயத்தில் நாம் அனைவரும் நிதானமாகவும் பொறுமையாகவும்   அல்லாஹ்விடம் துஆ  பிரார்த்தனை செய்தவா்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உலக சமாதான புருஷா் நபிகள் நாயகம் (ஸல்) அவா்கள் எமக்கு காட்டிக் கொடுத்த நேர்மையான  வழியே இது.  கண்ணியமிக்க  முஸ்லீம்களே இன்று வீடுகளையும் உடைமைகளையும் இழந்து கவலையிலும் கஷ்டத்திலும்  துயரத்துடனும்  வாழ்  மக்களுக்கு  உணவு உடை மருத்துவம்  போன்ற அத்தியவசியமான  விடயங்களில் பாதிக்கப்பட்ட  சகல முஸ்லீம்களுக்கும்  உதவிக் கரம் நீட்டி  பாதிக்கபட்ட எமது முஸ்லீம் சகோதர சகோதரிகளின் கண்களிலிருந்து வடியும்  கவலைக் கண்ணீர் உங்களின் தர்மநிதி  உதவிக் கரங்களினால் துயா் துடைத்து  அன்பு காட்டி  ஆதரிப்பீா்களாக   வல்லவன் நாயன் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் ஈருலகிலும் நல்லருள் புரிவானாக
ஆமீன்

இப்படிக்கு
  ஸ்ரீலங்கா   ஷரி ஆ கவுண்சிலின் ஆயுட் காலத் தலைவா்

கலாநிதி மௌலவி  ஹஸ்புல்லாஹ் (072777786)

Web Design by The Design Lanka