பாத்திமா சீமா வின் கொலைச் சந்தேக நபருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் - Sri Lanka Muslim

பாத்திமா சீமா வின் கொலைச் சந்தேக நபருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

அண்மையில் மட்டக்களப்பு -மஞ்சந்தொடுவாய் பகுதியில்; 9வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபருக்கு விளக்கமறியல் காலம் 14 நாள் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

 

மேற்;படி சந்தேக நபரை 23-09-2014 இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குறித்த சந்தேக நபரை எதிர்வரும்  7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

 

குறித்த சந்தேக நபருக்கு  எதிராக மட்டக்களப்பில் 23 இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

 

இதில் கலந்து கொண்டோர் சீமாவுக்கு நியாயம் எங்கே,சட்டத்தரணிகளே கொலையாளிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம்,சீமாவுக்கு நடந்த கொடுமையை இன்னொரு குழந்தைக்கு நடப்பதை தடுக்க கொலையாளிக்கு அதியுயர் தண்டணையான மரண தண்டணையை வழங்குமாறு தயவுடன் வேண்டுகிறோம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team