பானந்துறை: எறும்பு விஷத் தன்மைகொண்டவை அல்ல - Sri Lanka Muslim

பானந்துறை: எறும்பு விஷத் தன்மைகொண்டவை அல்ல

Contributors

 

(சக்தி நியூஸ்)

பானந்துறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எறும்பு வகை, விஷத் தன்மைகொண்ட எறும்புகள் அல்லவென பொரளை மருத்துவ ஆய்வு நிறுவனம் குறிப்பிடுகின்றது.

இந்த எறும்புகள் புதிய வகையைச் சேர்ந்தவை அல்லவெனவும், அவை நாட்டின் வேறு சில பகுதிகளில் இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்க தெரிவித்தார்.

இந்த எறும்புகளின் மாதிரிகளை பெற்றுக்கொண்டு, குடம்பிகள் ஆய்வுக் குழு மேற்கொண்ட ஆய்வுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த எறும்புகளினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இவற்றினால் சுகாதார ரீதியிலான வேறு பிரச்சினைகள் ஏற்படாதென டொக்டர் அனில் சமரநாயக்க சுட்டிக்காட்டினார்.-

Web Design by Srilanka Muslims Web Team