பாராளுமன்றத்தை கலைத்தல்: Dissolving Parliament » Sri Lanka Muslim

பாராளுமன்றத்தை கலைத்தல்: Dissolving Parliament

parliement

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Dr Anees Shariff


உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தல் முடிவுகளைப் பார்த்து விட்டு பலர் பா.மன்றம் கலைக்கப்பட்டு புதியதொரு பொதுத் தேர்தல் நடத்தப்படல் வேண்டுமென கூறி வருகின்றனர். இது சாத்தியமா ??

தற்போதைய யாப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம்  (Certified on 15th May 2015) ஒரு பொதுத்தேர்தலின் பின்னர் பா.மன்றம் முதன்முதலாக கூடுகின்ற திகதியில் இருந்து சரியாக நான்கு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி பா.மன்றத்தை கலைக்க முடியாது.

மேலும் அவ்வாறு அதற்கு முற்பட்ட காலத்தினுள் கலைக்க வேண்டுமாயின் பா.மன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் (150 பேர்)  பா.மன்றத்தினை ௧லைப்பதற்கு சார்பாக வாக்களிக்க வேண்டும். நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் என்பது 54 மாதங்களாகும். தற்போதைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெரிவு செய்யப்பட்டது. அப்படியாயின் இது வரை 30 மாதங்களே முடிவடைந்துள்ளன. இன்னும் 24 மாதங்களுக்கு (2 வருடங்கள்) ஜனாதிபதியினால் பா.மன்றத்தை கலைக்க முடியாது.

இதுதான் இந்த நாட்டின் அதியுயர் சட்டமாகிய அரசியலமைப்பு சட்டத்தின் ஏற்பாடாகும். மேலும் தற்போதைய ஐ.தே.முன்னணிக்கு பா.மன்றத்தில் 107 ஆசனங்கள் இருப்பதால் மிகுதி 118 ஆசனங்களே எஞ்சியிருக்கும். எனவே அவர்களில் (ஐ.தே.மு.) 32 பேர் மற்றைய 118 பேருடன் சேர்ந்து பா.மன்றத்தை கலைப்பதற்கு சார்பாக வாக்களிக்காத வரை ஜனாதிபதியினால் பா.மன்றத்தை கலைக்க முடியாது. இது தவிர TNA மற்றும் JVP போன்ற கட்சிகளின் முழு ஆதரவும் இதற்குத் தேவை. எனவே இந்த நிலையில் இப்போது பா.மன்றத்தினை கலைப்பது சாத்தியமா? இல்லையா? என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள்.

Article 70 of the constitution is hereby amended by the repeal of paragraph (1) that article, and the substitution therefor of the following paragraph:-

“(1) The President may by proclamation, summon, prorogue and dissolve parliament:

provided that the President shall not dissolve untill the expiration of a period of not less than four year and six months from the date appointed for its first meeting, unless parliament requests the President to do so by a resolution passed by not less than two-thirds of the whole number of members (including those not present), voting in its favour”.

Web Design by The Design Lanka