பாராளுமன்றில் அமளி துமளி நிலைமை - Sri Lanka Muslim
Contributors

பாராளுமன்றில் அமளி துமளி நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற விஜயதாச ராஜபக்ஷ, தனிப்பட்ட பாராளுமன்ற சட்ட மூலமொன்றை பாராளுமன்றில் சமர்ப்பிக்க முயற்சித்தார்.
ஆளும் கட்சியினர் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு எதிராக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற நியதிகளுக்கு முரணான வகையில் இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்க முயற்சிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு புறம்பான வகையில் இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்க முயற்சிக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட முயற்சித்த போதிலும் ஆளும் கட்சியினர் அதற்கு இடமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட நபர் பாராளுமன்ற சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதனை ஆளும் கட்சி தடுக்க முடியாது எனவும், அந்த அதிகாரம் ஆளும் கட்சிக்கு கிடையாது எனவும் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமை, உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கள் தொடர்பில் கருத்துக்களை அறிந்துகொள்ளக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு அமைவாக லட்மியர் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு இந்த சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team