பாராளுமன்றுக்குள் நடக்கும் விடயங்களை Facebook இல் Live செய்யும் உறுப்பினர்களை தடை செய்ய வேண்டும்..! - Sri Lanka Muslim

பாராளுமன்றுக்குள் நடக்கும் விடயங்களை Facebook இல் Live செய்யும் உறுப்பினர்களை தடை செய்ய வேண்டும்..!

Contributors
author image

Editorial Team

நாடாளுமன்றுக்குள் நடக்கும் விடயங்களை பேஸ்புக் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யும் உறுப்பினர்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் நாமல் ராஜபக்ச.

நேற்றைய தினம் லக்ஷ்மன் கிரியல்ல – தினேஷ் குணவர்தன இடையே இடம்பெற்ற வாதப் பிரதிவாதம் முற்றி அதன் பின்னணியில் பாரிய கூச்சல், குழப்பம் மற்றும் பதற்றம் தோன்றியிருந்த நிலையில் அது குறித்து விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, இன்று நாமல் ராஜபக்ச இவ்வாறு ஒரு வேண்டுகோளை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team