பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்த இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர..! - Sri Lanka Muslim

பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்த இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர..!

Contributors

இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இந்த இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கிருந்த அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த தாக்குதல் முயற்சியை தடுத்து நிறுத்தியதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது படைக்கல சேவிதரும் நாடாளுமன்ற பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்துள்ளார்.

நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் மனுஷ நாணயக்கார மீது இரண்டு தடவைகள் தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team