பாராளுமன்ற குழுக்களில் பணியாற்ற எம்.பிக்கள் நியமனம்! - Sri Lanka Muslim

பாராளுமன்ற குழுக்களில் பணியாற்ற எம்.பிக்கள் நியமனம்!

Contributors

3 பாராளுமன்ற குழுக்களில் பணியாற்ற தலா 10 பேர் கொண்ட எம்.பிக்களின் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

பாராளுமன்றத்தினால் கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காகத் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) சபையில் அறிவித்தார்.

வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு உறுப்பினர்கள்

 1. செஹான் சேமசிங்க
 2. அனுப பஸ்குவல்
 3. சமல் ராஜபக்ஷ
 4. காமினி லொக்குகே
 5. சம்பத் அதுகோரள
 6. சஞ்ஜீவ எதிரிமான்ன
 7. கருணாதாஸ கொடிதுவக்கு
 8. (திருமதி) கோகிலா குணவர்தன
 9. (திருமதி) முதிதா பிரிஸான்தி
 10. யதாமினி குணவர்தன

வழிவகைகள் பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

பாராளுமன்றத்தினால் டிசம்பர் 06 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் வழிவகைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கான   உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) சபையில் அறிவித்தார்.

வழிவகைகள் பற்றிய குழு உறுப்பினர்கள்

 1. ரஞ்சித் சியம்பலாபிட்டிய
 2. சட்டத்தரணி சிசிர ஜயகொடி
 3. சஷீந்திர ராஜபக்ஷ
 4. ஜோன்ஸ்டன் பெனாண்டோ
 5. வஜிர அபேவர்தன
 6. மஹிந்தானந்த அலுத்கமகே
 7. நாலக பண்டார கோட்டேகொட
 8. நிபுண ரணவக
 9. சமன்பிரிய ஹேரத்
 10. (திருமதி) மஞ்சுளா திஸாநாயக்க

பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

பாராளுமன்றத்தினால் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கான உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) சபையில் அறிவித்தார்.

பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழு உறுப்பினர்கள்

 1. செஹான் சேமசிங்க
 2. தாரக்க பாலசூரிய
 3. (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி
 4. சீ.பீ. ரத்நாயக்க
 5. நாமல் ராஜபக்ஷ
 6. ஜீவன் தொண்டமான்
 7. அகில எல்லாவல
 8. குமாரசிறி ரத்னாயக்க
 9. (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார
 10. மர்ஜான் பளீல்

Web Design by Srilanka Muslims Web Team