பாலஸ்தீனம்: பாலஸ்தீனம்: ஹமாஸ் - ஃபதா இடையே சமரச ஒப்பந்தம்ஹமாஸ் - ஃபதா இடையே சமரச ஒப்பந்தம் » Sri Lanka Muslim

பாலஸ்தீனம்: பாலஸ்தீனம்: ஹமாஸ் – ஃபதா இடையே சமரச ஒப்பந்தம்ஹமாஸ் – ஃபதா இடையே சமரச ஒப்பந்தம்

ba

Contributors
author image

BBC

பாலஸ்தீனத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களுக்குள் நீடிக்கும் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளும் வகையில், தங்கள் எதிராளி அமைப்பான ஃபதாவுடன் சமரச ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தில் காஸா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிலும், மேற்குக் கரைப் பகுதி ஃபடாவின் கட்டுப்பாட்டிலும் உள்ளனபடத்தின் காப்புரிமைAFP
Image captionபாலஸ்தீனத்தில் காஸா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிலும், மேற்குக் கரைப் பகுதி ஃபதாவின் கட்டுப்பாட்டிலும் உள்ளன

காஸா மற்றும் மேற்குக்கரை என்ற இரு பகுதிகளிலும் பாலஸ்தீனியர்களே இருந்தாலும், கடந்த 2007-ஆம் ஆண்டு இந்த இரு அமைப்புகளுக்கும் இடையே வெடித்த மோசமான மோதலுக்குப் பிறகு, காஸாவை ஹமாசும், மேற்குக் கரையை ஃபதாவும் தனித்தனியே ஆண்டு வருகின்றன.

அதற்கு முந்தைய ஆண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஹமாஸ், அப்பகுதியில் இருந்து ஃபதா அமைப்பினரை வெளியேற்றிய பின்னர், காஸா பகுதியில் தன் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டியது.

காஸா பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ், இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்கள் வியாழனன்று வெளியிடப்படும் என்று கூறியுள்ளது. இந்த விவகாரத்தில், ஃபதா இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை.

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இந்த ஒப்பந்தத்தை வரவேற்பதாகக் கூறியுள்ளார். “என்னவெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்பது பற்றி ஃபதா குழு விளக்கமாக அறிக்கை அனுப்பியுள்ளது. பிரிவினையை முடிவுக்குக் கொண்டுவரும் இறுதி உடன்பாடு இது என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தைகளுக்கு, எகிப்து அரசு மத்தியஸ்தம் செய்து வந்தது.

பாலஸ்தீன்: ஹமாஸ் மற்றும் ஃபடா இடையே சமரச ஒப்பந்தம்

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான பாலஸ்தீன தகவல் மையம், ஒப்பந்தம் பற்றித் தெரிவித்ததுடன், கெய்ரோவில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் ஒப்பந்த விவரங்கள் வெளியிடப்படும் என்று கூறியுள்ளது.

கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ‘தீவிரமானதாகவும் ஆழமானதாகவும்’ இருந்ததாக ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் சமி அபு சூரி புதனன்று தெரிவித்தார்.

“பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக இருந்ததாகவும், எகிப்து தரப்பு நடுநிலையுடன் நடந்துகொண்டதாகவும்” பாலஸ்தீன தகவல் மையம் கூறியுள்ளது. காஸாவை நிர்வகித்து வரும் ஆட்சிக் குழுவைக் கலைக்க கடந்த மாதம் ஹமாஸ் ஒப்புக்கொண்டிருந்தது.

 
மத்திய கிழக்கை மாற்றியமைத்த போர்

மேற்குக் கரையை நிர்வகித்து வரும், ஃபதாவைச் சேர்ந்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன நிர்வாகத்தின் முக்கியக் கோரிக்கையாக இது இருந்தது.

அதன் பின்னர், பாலஸ்தீனப் பிரதமர் ரமி ஹம்தல்லா அப்போது காஸாவுக்கு ஒரு அரிதான பயணத்தை மேற்கொண்டார்.

அப்போது காஸாவின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்புக்கான பொறுப்புக்களை பாலஸ்தீன நிர்வாகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் என்று அவர் கூறியிருந்தார்.

ஹமாஸ் அமைப்பும், சில இடங்களில் அதன் ராணுவப் பிரிவும் இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் பிற நாடுகளால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka