பாலஸ்தீன் குறித்து கத்தார் அமீர் ஐநாவில் பேச்சு....!! - Sri Lanka Muslim

பாலஸ்தீன் குறித்து கத்தார் அமீர் ஐநாவில் பேச்சு….!!

Contributors
author image

முஸாதிக் முஜீப்

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுத்தொடர் தொடங்கி விட்டது. அதில் பங்கேற்று பேசிய கத்தார் அமீர் தமீம் பேசுகையில்….

அப்பாவிகளின் இரத்தம் எங்கு சிந்தப்பட்டாலும் பிரித்து பார்க்காமல் இருக்க வேண்டும் பாலஸ்தீன் பிரச்சினை 70 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே இருக்கிறது.

இஸ்ரேல் மேலும் மேலும் பாலஸ்தீன் மீது தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இஸ்ரேல் மேற்கு கூரையிலும், குத்சிலும் குடியிருப்புகளை அமர்த்தி மேலும் மேலும் ஆக்கிரமிப்பை செய்து கொண்டிருக்கிறது.

பலஸ்தீன மக்கள் முன்பை விட இப்போது தங்களது உரிமைக்கு கடுமையாக போராடி வருகின்றனர்.

இஸ்ரேல் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாமல் தோல்வி கண்டு விட்டனர். பலஸ்தீன மக்கள் தம் உரிமையை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக உள்ளனர்.

இஸ்ரேலின் உரிமை மீறல்களால் அரபு மக்கள் இஸ்ரேலுடன் உறவுகளைப் பேண மறுக்கிறார்கள்.

அப்பாவிகளின் இரத்தம் எங்கு சிந்தப்பட்டாலும் பிரித்து பார்க்காமல் இருக்க வேண்டும், அளவீடுகளில் மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்.

பாலஸ்தீன் பிரச்சினையை முடிவு கொண்டு வரவும் வேண்டும் என்றார் கத்தார் அமீர் தமீம்.

கத்தாரில் இருந்து செய்திகளுக்காக முஸாதிக் முஜீப்

Web Design by Srilanka Muslims Web Team