பாலித தெவரப்பெரும கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் - Sri Lanka Muslim

பாலித தெவரப்பெரும கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்

Contributors

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவ சபையுடன் நேற்று (06) நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

பாலித தெவரப்பெரும மீது விசாரணை நடத்தப்படவுள்ளதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

 

நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் குடிபோதையில் குழப்பம் விளைவித்தமையால் பாலித தெவரப்பெரும மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (ad)

Web Design by Srilanka Muslims Web Team