பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சந்தேக நிலை: ரிஷாத்தின் மைத்துனர் பிணையில் விடுதலை..! - Sri Lanka Muslim

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சந்தேக நிலை: ரிஷாத்தின் மைத்துனர் பிணையில் விடுதலை..!

Contributors

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மொஹமட் சியாப்தீன் இஸ்மத் எனும் நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நபரை 5 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் விடுதலை செய்ய பிரதான நீதவான் புத்திக சீ ராகல உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன் குறித்த சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரிசாத் பதியுதீனின் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட இஷாலினின் வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இவர் மீது அங்கு வேலை செய்த மற்றுமொரு பெண் வழங்கிய குற்றாட்டு அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் . ஆனால் குறித்த பெண் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில் காணப்பட்டதால் பிணை வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது!

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2016 ஆம் ஆண்டு சேவையாற்றிய யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்பட்டும் சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தமையால் இந்த வழக்கில் அவரை தொடர்ந்தும் சிறைப்படுத்த முடியாத நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team