பால்மா, சமயல் எரிவாயு விலைகள் அதிகரிக்க தீர்மானமில்லை- ஜோன்ஸ்டன் பெர்னாட்டோ - Sri Lanka Muslim

பால்மா, சமயல் எரிவாயு விலைகள் அதிகரிக்க தீர்மானமில்லை- ஜோன்ஸ்டன் பெர்னாட்டோ

Contributors

பால்மா மற்றும் சமயல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் இதுவரையிலும் எந்த தீர்மானம் எதுவும் மேற்கொள்ள வில்லை எ என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாட்டோ தெரிவித்துள்ளார்.

பால்மாக்களின் விலைகளை அதிகரிக்குமாறு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், பால்மா பொதிகளை மறைத்து வைப்பதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குருநாகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பால் மா விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் என்ற முறையில் எங்களுக்கு சில வரைமுறைகள் இருக்கின்றன. என்றாலும் இதனை எந்த நிறுவனத்திற்கும் பலவந்தமாக மேற்கொள்ளும் உரிமை கிடையாது.
பால்மா தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சு என்ற வகையில் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்கின்றோம் என குறிப்பிட்டார்.

 

பால்மாவிற்கோ அல்லது சமயல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பிலோ அரசாங்கம் இது வரையில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்பட்ட வில்லை. எனினும் நுகர்வோரை இக்கட்டுக்குள்ளாக்கும் தீர்மானத்தை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டார்.(sooriyanfm)

Web Design by Srilanka Muslims Web Team