பால்மா தட்டுப்பாடு ;நான் கறுப்பு கோப்பிதான் குடிக்கிறேன்- ரணில் விக்கிரமசிங்க - Sri Lanka Muslim

பால்மா தட்டுப்பாடு ;நான் கறுப்பு கோப்பிதான் குடிக்கிறேன்- ரணில் விக்கிரமசிங்க

Contributors

தற்போது நாட்டில் பால்மாக்களுக்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

நாட்டில் பால்மாக்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுகிறது. குழந்தைகளுக்கு வழங்க பால்மா இல்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று அரசாங்கம் கூறுகின்றது. குழந்தைகளுக்கும் பால்மா கிடைக்கவில்லை, இளைஞர்களுக்கும் கிடைக்கவில்லை. நான் என்றால் கறுப்பு கோப்பிதான் குடிக்கிறேன்.

 
ஆனால் நிறைய பேர் பால்மாவை எதிர்பார்க்கிறார்கள். தற்போது தாய்மார்களுக்கு பால்மாக்களை தேடுவதை விடுத்து வேறு பணிகள் இல்லாமல் போய்விட்டது.

 

ஆனால் பால்மா அவசியம் இல்லை என்று அரசாங்கம் கூறுகின்றது.
பால்மா கொள்கலன்களை இறக்குமதி செய்யாமல், எத்தனோல் இறக்குமதி அதனை குடிக்குமாறு பணிக்கிறார்கள்.(sfm)

Web Design by Srilanka Muslims Web Team