பாவனைக்குதவாத ஆட்டிறைச்சி காத்தான்குடியில் விற்பனை.பொது சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கியது. - Sri Lanka Muslim

பாவனைக்குதவாத ஆட்டிறைச்சி காத்தான்குடியில் விற்பனை.பொது சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கியது.

Contributors

காத்தான்குடி நகர சபை பிரிவில் விற்பனை செய்யப்பட்ட பாவனைக்குதவாத
இருபது கிலோ ஆட்டிறைச்சியை காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடந்த சனிக்கிழமை கைப்பற்றியுள்ளனர் .
காத்தான்குடி பொதுச்சந்தையில் பாவனைக்குதவாத ஆட்டிறைச்சி விற்பனை செய்வதாக காத்தான்குடி பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்பார்வை சுகாதார பரிசோதகரான ஏ . எம் . எம் . றபீக் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களான ஏ . எல் . எம் . றஹ் – மத் – துல்லா , கே . ஜெய்சங்கர் ஆகியோர் அங்கு சென்று குறித்த ஆட்டிறைச்சி கடையில் இறைச்சியை பரிசோதனை செய்த போது குறித்த இறைச்சி பாவனைக்கு உதவாதது என தெரியவந்ததையடுத்து அவை கைப்பற்றப்பட்டன .
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறித்த ஆட்டிறைச்சிக்கடை உரிமையாளரை எச்சரித்ததுடன் அனுமதிப்பத்திரத்தையும் தற்காலிகமாக இடை நிறுத்துமாறு காத்தான்குடி நகர சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர் .ttn

Web Design by Srilanka Muslims Web Team