பிணை முறிக்கான கட்டணங்களை செலுத்தாமையால் இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வங்கியொன்று வழக்குத் தாக்கல்..! - Sri Lanka Muslim

பிணை முறிக்கான கட்டணங்களை செலுத்தாமையால் இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வங்கியொன்று வழக்குத் தாக்கல்..!

Contributors
author image

Editorial Team

பிணை முறிக்கான கட்டணங்களை செலுத்தாமையால் இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வங்கியொன்று வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சியை தடுப்பதற்காக இலங்கை முதல் தடவை தனது வெளிநாட்டு கடன்களை செலுத்த தவறியுள்ள நிலையிலேயே ஹமில்டன் ரிசேர்வ் வங்கி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இலங்கையின் சர்வதேச பிணைமுறியில் 250 மில்லியன் டொலர்களைக் கொண்டுள்ள ஹமில்டல் ரிசேர்வ் வங்கி 25 ஆம் திகதி  வட்டி உட்பட முழுமையான தொகையை இலங்கை செலுத்த வேண்டும் என கோரி நேற்று வழக்குதாக்கல் செய்துள்ளது.

செயின்ட் கிட்ஸ் நெவிசினை தலைமையகமாக கொண்ட இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட அதன் உயர் அதிகாரிகளே காரணம் என வங்கி தனது மனுவில் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team