பிணை முறி மோசடி - ரவி உள்ளிட்டோரின் மனுக்களுக்கு என்ன நடக்கும்? - Sri Lanka Muslim

பிணை முறி மோசடி – ரவி உள்ளிட்டோரின் மனுக்களுக்கு என்ன நடக்கும்?

Contributors

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் எழு பேரை கைது செய்வதற்காக வௌியிடப்பட்டுள்ள பிடியாணையை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தொடருவதா? இல்லையா? என்பது தொடர்பில் மனுதாரர்களிடம் ஆலோசனை பெற்று மே மாதம் 07 ஆம் திகதி சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் இன்று (26) மேன்முறையீட்டு தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் நாயகம் மிலிந்த குணதிலக நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, இந்த மனுக்களை தொடருவதற்கு அவசியம் உள்ளதா? என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்

Web Design by Srilanka Muslims Web Team