பின்தங்கிய சிராவஸ்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த சஹர்ஜான் ரியாஸா எனும் மாணவி மருத்துவி பீடத்திற்கு தெரிவு - Sri Lanka Muslim

பின்தங்கிய சிராவஸ்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த சஹர்ஜான் ரியாஸா எனும் மாணவி மருத்துவி பீடத்திற்கு தெரிவு

Contributors
author image

Anbu Javaharsha

பின்தங்கிய கல்வி மாவட்டமான அநுராதபுரம் மாவட்டத்தின் சிராவஸ்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த சஹர்ஜான் -அப்துல் காதர் சித்தி ஜனுபா தம்பதிகளின் புதல்வியும், அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய பழைய மாணவியுமான சஹர்ஜான் ரியாஸா 1.6684 Z புள்ளிகளைப் பெற்று ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயிலத் தெரிவாகியுள்ளார் .அல்ஹம்துல்லிலாஹ்

 

இவரின் திறமையையும், விடா முயற்சியையும், 2003 ஆம் ஆண்டு கணவரை இழந்த இவரின் தாயாரின் தியாகத்துடன் கூடிய முயற்சியையும், எவ்வளவு பாராட்டினாலும் தகும்.மிகவும் வசதி குறைந்த நிலையில் இந்த தாய் தனது ஐந்து பிள்ளைகளுக்கு கல்வி வழங்க நடத்திய போராட்டத்தை அநுராதபுரம்முஸ்லிம் சமூகமே அறியும்.சில நல்ல மனது கொண்டவர்களின் உதவியால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

 

இது ஒரு ஆரம்பமே!இந்தப் பயணம் வெற்றிகரமாகத் தொடர எமது உண்மையான வாழ்த்துக்களையும் ,ஆதரவையும் வழங்குவோம்

Web Design by Srilanka Muslims Web Team