பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறார்? திடுக்கிடும் தகவல் - Sri Lanka Muslim

பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறார்? திடுக்கிடும் தகவல்

Contributors

சர்வதேச அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறார் என குவைத் பேராசிரியர் ஒருவர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

 

சர்வதேச அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்க சீல் படையினர் கடந்த 2011ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். பின்னர் இவரது சடலத்தை கடலின் நடுவே அடக்கம் செய்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

 

இச்சம்பவம் நிகழ்ந்து 3 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் அரசியல் அறிவியல் பேராசிரியரான அப்துல்லா அல் நஃபீசி என்ற பேராசிரியர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறுவதை நான் முற்றிலுமாக சந்தேகிக்கிறேன். அவர் அமெரிக்காவால் கடத்தப்பட்டு இன்னும் உயிருடன் மறைத்து வைக்கப்பட்டுள்ளார் என்றே நான் நம்புகிறேன்.

 

உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா கோடிக்கணக்கான டொலர்களை செலவழித்து 11 ஆண்டுகளாக பின்லேடனை வலைவீசி தேடி வந்தது. பின்லேடனை கண்டவுடன் சுட்டுக்கொன்று விட்டது என கூறுவது வியக்கதக்கதாய் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

எனவே ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கடத்திச் சென்று உயிருடன் தான் வைத்துள்ளது. இந்த உண்மையை மறைப்பதற்காக அவரை சுட்டுக் கொன்று பிணத்தை நடுக்கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்கா பொய்யை பரப்பி வருகிறது என்ற பேராசிரியரின் சர்ச்சைக்குரிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(tc)

Web Design by Srilanka Muslims Web Team