பிபா' விருது: 2017ம் ஆண்டின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு » Sri Lanka Muslim

பிபா’ விருது: 2017ம் ஆண்டின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு

ron

Contributors
author image

Editorial Team

லண்டன்: 2017ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான ‛பிபா’ விருதினை, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ‘பிபா’ சார்பில் ஆண்டுதோறும் தலைசிறந்த வீரர் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டின் சிறந்த வீரராக போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

லண்டனில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியை(அர்ஜென்டினா) முந்தி, சிறந்த வீரர் விருதினை ரொனால்டோ கைபற்றினார். கடந்த 5 ஆண்டுகளில் 4வது முறையாக பிபா விருதை ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka