பிரதமரிடம் ஒரு பில்லியன் இழப்பீடு; மதங்கள் தொடர்பாகவும் புதிய சட்டம்- ஜாதிக்க ஹெல உறுமய » Sri Lanka Muslim

பிரதமரிடம் ஒரு பில்லியன் இழப்பீடு; மதங்கள் தொடர்பாகவும் புதிய சட்டம்- ஜாதிக்க ஹெல உறுமய

Contributors

ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரரை அவமதித்தமைக்கு ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு பிரதமர் டி.எம் ஜயரத்னவிற்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்கத் தவறினால், பிரதமருக்கு எதிராக வழக்குத் தாக்கல்செய்து, பணத்தை அறவிட நேரிடும் என ஜாதிக்க ஹெல உறுமய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமல்பே சோபித்த தேரர் சார்பில், டியுட்டர் பெரேரா இந்த கோரிக்கைக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

கம்பளையில் கடந்த 1ஆம் திகதி திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில், பிரதமர் தெரிவித்த கருத்தினால், ஓமல்பே சோபித்த தேரர் மீது மக்கள் கொண்டுள்ள கௌரவம் மற்றும் மரியாதைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் ஜாதிக்க ஹெல உறுமய குறிப்பிடுகின்றது.

 

மதங்கள் தொடர்பாக பிரச்சினைக்கு தீர்வு காண சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்

சமயங்கள் சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தாமதமின்றி சட்ட கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது அவசியம் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அந்த சட்ட கட்டமைப்பில் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க சமயங்களை சேர்ந்த பிரதிநிதிகளை கொண்ட பேரவை ஒன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் சட்டவிரோத ஜெப ஆலயங்கள் இயங்கி வருகின்றன. இதனால் நாட்டில் பல இடங்களில் மோதல்கள் ஏற்படுகின்றன.

மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் மூலம் ஒன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்த போது கத்தோலிக்க திருச் சபையின் இரட்டை நிலைப்பாடுகள் காரணமாக அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போனது.

மத வழிப்பாட்டு தலங்கள் சம்பந்தமாக சட்டத்தை கொண்டு வந்து அவற்றின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். எந்த மதத்தை அடிப்படையாக கொண்டும் வன்முறைகள் ஏற்படுத்தப்படுமாயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனால் இதனை நிறுத்த கட்டாயமாக சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டியது அவசியம். மத அடிப்படையிலான ஏதாவது மோதல்கள் ஏற்பட்ட அதற்கு தீர்வுகளை காணாது, சம்பவம் தொடர்பில் எந்த தரப்பு மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்தக் கூடாது என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டார்.-TC

Web Design by Srilanka Muslims Web Team