பிரதமரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்..! - Sri Lanka Muslim

பிரதமரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்..!

Contributors

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mahindarajapaksa.lk என்ற இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த இணையத்தளம் நேற்று (02) ஹக் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஸவின் இணையத்தள முகவரிக்குள் பிரவேசிக்கும் போது, வேறொரு முகவரிக்கு பிரவேசிக்கும் வகையில் URL Redirect செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு URL Redirect செய்யப்பட்டுள்ள இணையத்தளத்தின் BITCOIN தொடர்பான தகவல்களே காணப்பட்டதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

Web Design by Srilanka Muslims Web Team