பிரதமருக்கு எதிராக வழக்கு » Sri Lanka Muslim

பிரதமருக்கு எதிராக வழக்கு

Contributors

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே தேரரை அவமதித்தமைக்காக பிரதமர் டி.எம்.ஜெயரட்னவுக்கு எதிராக அடுத்த வாரம் வழக்க தாக்கல் செய்யவிருப்பதாக, ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

போதைப் பொருட்களுடன் கூடிய கொள்கலன் ஒன்றை விடுவிப்பதற்கு பிரதமர் கடிதம் அனுப்பியதாக கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பில், ஓமல்பே தேரரை பிரதமர் உண்மையான துறவி இல்லை என்று தெரிவித்திருந்தார்.

ஓமல்பே தேரர் காவி உடை அணிந்த சாதாரண மனிதர் என்றும், அவர் உண்மையான பிக்கு இல்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கூற்றுக்கு எதிராகவே தாங்கள் வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team