பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி - Sri Lanka Muslim

பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி

Contributors

பிரதமருக்கு எதிராக தற்போது எம்பிலிப்பிட்டிய நகர மத்தியில் பேரணி ஒன்று இடம்பெறுகிறது.

எம்பிலிப்பிட்டிய ரஜ மகா விகாரையிலிருந்து இன்று (05) முற்பகல் 8 மணியளவில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியில் பௌத்த மத தலைவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

பேரணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கறுப்பு கொடி ஏந்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பௌத்த சாசன அமைச்சுக்கு பிறிதொரு அமைச்சரை நியமிக்குமாறு பேரணியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தலைமையில் இந்த எதிர்ப்பு பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. (ad)

Web Design by Srilanka Muslims Web Team