பிரதமருடனான கலந்துரையாடல்: NFGGயின் மகளிர் பிரதிநிதிகளும் பங்கேற்பு! - Sri Lanka Muslim

பிரதமருடனான கலந்துரையாடல்: NFGGயின் மகளிர் பிரதிநிதிகளும் பங்கேற்பு!

Contributors

அரசியல் கட்டமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல் தொடர்பான பிரதமருடனான கலந்துரையாடல் (28) தினம் பிரதமர் அலுலலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் பெண் உறுப்பினர்களும், அரசியல் பெண் செயற்பாட்டாளர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதில் NFGG கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நகர சபை உறுப்பினர் ஜெம்ஹுத் நிசா மசூத், முன்னாள் நகர சபை உறுப்பினர் றகீபா அன்சார் ஆகியோரரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு IWARE நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team