பிரதேசவாத அரசியலாலும் பதவி மோகத்தாலும் முஸ்லிம்களுடைய அரசியல்பலம் சிதைவடைந்தது - Sri Lanka Muslim

பிரதேசவாத அரசியலாலும் பதவி மோகத்தாலும் முஸ்லிம்களுடைய அரசியல்பலம் சிதைவடைந்தது

Contributors

(எஸ்.அஷ்ரப்கான்)

பிரதேசவாத அரசியலாலும் பதவி மோகத்தாலும் முஸ்லிம்களுடைய அரசியல்பலம் சிதைவடைந்தது என்பது மறுக்க முடியாத வராலாற்று உண்மையாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாரை மாவட்ட

“வி” பிரிவின் பிரச்சாரச் செயலாளர் எஸ். அப்துஸ்ஸலாம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அவ்வாறான சந்தர்ப்பத்திற்கு வழிகோலும் ஒரு களமாக கல்முனை மாநகர மேயர் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தது நாடே அறிந்த உண்மை நிலையாகும்.

கல்முனை மாநகர மேயர் விவகாரம் மற்றும் முஸ்லிம் அரசியல் கள நிலவரம் தொடர்பாக வினவியபோதே ஸலாம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதில் அவர் மேலும் குறிப்பிடும்போது,

தற்பொழுது கல்முனையின் முன்னாள் மேயருடைய இராஜிநாமாவை அடுத்து சுமுக நிலையை அடைந்திருப்பதையிட்டு கல்முனைத்தொகுதி முஸ்லிம்கள் சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த இழுபறி அரசியல் முற்றி சாய்ந்தமருதிற்கு வேறு உள்ளுராட்சி மன்றமும், கல்முனைக்கு வேறு உள்ளுராட்சி மன்றமும் வேண்டும் என்கின்ற பிரதேசவாத அரசியல் வெற்றிபெறும் பட்சத்தில் அதன் தாற்பரியத்தினதும், விளைவினதும் பெறுபேறு கல்முனைத்தொகுதியின் ஒரு பகுதியை வேறு இனத்தவர் ஆளுகின்ற துற்பாக்கிய நிலையிலிருந்து மீண்டதற்காக. ஆனாலும் சாய்ந்தமருது மக்கள் மீது பாசாங்குப்பரிதாபம் காட்டி உங்களுடைய அரசியல் உரிமையை பெற்றுத்தருவோம் என்று வீடு எரிந்து கொண்டிருக்கும்பொழுது நெருப்புக் கேட்க நினைக்கின்ற அரசியல்வாதிகள் விடயத்தில் சாய்ந்தமருது மக்களும்,  அரசியல்வாதிகளும் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

இராமன் ஆண்டால் என்ன ? இராவணண் ஆண்டால் என்ன ?  நமது வாக்கு வங்கி அதிகரித்தால் போதும் என்று சாய்ந்தமருது மக்களையும் அரசியல்வாதிகளையும் பகடைக்காய்களாகப்பயன்படுத்த கங்கணம் கட்டுகின்ற அரசியல்வாதிகளுக்கு சாங்ந்தமருது மக்கள் இடம்கொடுக்கும் பட்சத்தில் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. என்பதை மிகவும் அழுத்தமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

பிரதேசவாதத்தினாலும் பதவி மோகத்தினாலும் தற்பொழுது  நமது மார்க்கத்திலும் கலாசாரத்திலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனவாதக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற அளவிற்கு எமது அரசியல் பலம் சிதைக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் கட்டாயம் சிந்திக்க வேண்டும்.

ஆகவே, எமது அரசியல் பலத்தைக்கூறு போட்டு மகுடம் சூட்டிக்கொள்ள யாராவது நினைத்தால் அது பகல் கனவு என்பதை பொதுமக்கள சம்மந்தப்பட்டவர்களுக்குப் புகட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team