பிரபல அறிவிப்பாளர் நௌபீலின் மனைவி பாத்திமா நஜா வபாத் » Sri Lanka Muslim

பிரபல அறிவிப்பாளர் நௌபீலின் மனைவி பாத்திமா நஜா வபாத்

naufeell

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வை.எம்.ஆஷிக் , எம்.எஸ்.எம். ஸாகிர்


பிரபல வானொலி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல் அவர்களின் மனைவி பாத்திமா நஜா (வயது 18) இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை காலமானார்.

குழந்தை பிரசவத்திற்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரசவத்திற்கு முன்னதாக குழந்தை மரணித்துள்ளதுடன் அவரும் உயிரிழந்துள்ளார்.

சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியில் புகழ்பூத்த ஆலிம் குடும்பத்தில் பிறந்த பாத்திமா நஜா, மர்ஹூம் மௌலவி சாலிஹ் அவர்களின் பேத்தியும் நைரோஸ் மௌலவியாவின் மகளும் மௌலவி நுஹ்மான் (நளீமி) அவர்களின் மருமகளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாஸா இன்று சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

 

Web Design by The Design Lanka