பிரபல ரஷிய பத்திரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை » Sri Lanka Muslim

பிரபல ரஷிய பத்திரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை

201805300230118328_Prominent-Russian-journalist-shot-dead-in-Ukraine_SECVPF

Contributors
author image

Editorial Team

ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவர், உக்ரைன் தலைநகர் கெய்வில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர், ஆர்கடி பாப்சென்கோ. இவர் ரஷியாவில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறி உக்ரைன் நாட்டில் தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில், அவர் நேற்றிரவு தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது மனைவி போலீசாருக்கு தகவல் அளித்தார். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். பத்திரிக்கையில் செய்தி வெளியிவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Web Design by The Design Lanka