“பிரபாகரன், சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல, நம்ம கட்சியின் கருத்துப்படி!” -இரா.சம்பந்தன் - Sri Lanka Muslim

“பிரபாகரன், சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல, நம்ம கட்சியின் கருத்துப்படி!” -இரா.சம்பந்தன்

Contributors

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என தமது கட்சி எம்.பி. கூறியது அவரது சொந்தக் கருத்து. கட்சியின் கருத்து அல்ல” என்று தெரிவித்துள்ளார், இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இலங்கையில் யுத்தம் முடிந்தபின் தேர்தல் காலங்களில் மட்டும் விடுதலைப் புலிகளை சிலாகிப்பது இக் கட்சியின் சமீபகால வழக்கம்.  இந்த நிலையில், சமீபத்தில் இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், “தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்ட வீரர்” என இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், “எமது கட்சி எம்.பி., பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு உணர்ச்சி வசப்பட்டு கருத்து வெளியிட்டிருக்கக் கூடும்.

ஆனால், எமது கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல.  கடந்த காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படியான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை .  எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படியான கருத்தை தெரிவிக்கப்போகிறார் என்று முன்கூட்டியே எமக்கு தெரியவந்திருந்தால், இப்படியான கருத்துக்களை வெளியிட அனுமதித்திருக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Web Design by Srilanka Muslims Web Team