பிரான்ஸில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல் - Sri Lanka Muslim

பிரான்ஸில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்

Contributors

 

-A.J.M மக்தூம்-

பிரான்சின் வடகிழக்கில் அமைந்துள்ள துயோன்பா நகரில் வசித்து வரும் மொரோக்கோ வம்சாவளியைச் சேர்ந்த, மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த ஒரு முஸ்லிம் பெண் மீது அவரது அண்டை வீட்டுக்கார ஆண் ஒருவர் இனவாத தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

இத்தாக்குதல் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தனது கணவர் தொழில் நிமித்தம் வெளியில் சென்ற வேளையிலேயே 24 வயதுடைய குறித்த அந்த இளம் பெண் மீது காடைத் தனமான தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தும் போது தான் கர்ப்பமாக இருக்கின்றேன் என்று கதறிய போதும், எவ்வித பரிவுணர்வும் காட்டாத அந்த காடையர், கழுத்தை நெரித்து முகத்தில் அறைந்து கடுமையாக தாக்கிவிட்டு சென்றதாக பாதிக்கப் பட்ட அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

தான் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணாக இருப்பதே இத்தாக்குதலுக்கான ஒரே காரணம் என குறித்தப் பெண் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே வேலை இதன் போது குறித்த நபர் மிக மோசமாக தன்னை திட்டியதாகவும், இத்தாக்குதலை முழுமையாக பதிந்து வைத்துள்ளதாகவும் பாதிக்கப் பட்ட அந்த பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

பாதிக்கப் பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தாக்குதல் தொடர்பாக போலீசில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Web Design by Srilanka Muslims Web Team