பிரிட்டனின் செல்வாக்கு மிக்க ஆசியர் மலாலா: லண்டன் பத்திரிகை தகவல் - Sri Lanka Muslim

பிரிட்டனின் செல்வாக்கு மிக்க ஆசியர் மலாலா: லண்டன் பத்திரிகை தகவல்

Contributors

பாகிஸ்தானில் பெண்கள் கல்வியை வலியுறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட மலாலா யூசப்சாய் கடந்த ஆண்டு தலிபான்களால் நெற்றியில் சுடப்பட்டார்.

இவருடன் இருந்த மற்ற இருசிறுமிகளும் சுடப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிய மலாலாவுக்கு பிரிட்டனில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அங்கேயே தங்கியிருக்கும் மலாலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை குறித்து பல்வேறு சர்வதேச கருத்தரங்களில் பேசிவருகிறார். இதனால் மலாலாவின் செல்வாக்கு உலகம் முழுவதும் அதிகரித்து, பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று லண்டனில் நடைபெற்ற கராவி குஜராத்-2 என்ற கூட்டத்தில் தைரியத்திற்காக வழங்கப்படும் ஹேமர் விருதுக்கு, மலாலாவும் அவருடன் சுடப்பட்ட மற்ற இரு சிறுமிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த வாரப் பத்திரிக்கை ஒன்று பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 101 பேரின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மலாலா யூசப்சாய் செல்வாக்கு மிக்க முதல் ஆசியராக உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக, லேபர் கட்சியின் எம்.பி.யும், பாராளுமன்ற விவகாரக்குழு தலைவருமான கீத் வாஸ் இரண்டாவது செல்வாக்கு மிக்க ஆசியராக உள்ளார். ஒருமுறை பிரிட்டனின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த லட்சுமி மிட்டல் இப்போது இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். நான்காம் இடத்தில் ஹிந்துஜா பிரதர்ஸ் உள்ளனர்.

malala100

Web Design by Srilanka Muslims Web Team