பிரிட்டன் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பின் தலைவர் விலகல்! - Sri Lanka Muslim

பிரிட்டன் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பின் தலைவர் விலகல்!

Contributors

 

பிரிட்டனின் இஸ்லாமிய எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் தீவிர வலதுசாரி குழுவான இங்கிலிஷ் டிபென்ஸ் லீக்கிலிருந்து (இ. டி. எல்.) அதன் நிறுவனர் டொம்மி ரொபின்சன் விலகிக் கொண்டுள்ளார்.

அமைப்பின் தீவிர செயற்பாடுகளை தம்மால் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறியே அவர் விலகிக்கொண்டு ள்ளார். இ. டி. எல். குழுவினர் நாடு பூராகவும் இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தாம் தொடர்ந்து இஸ்லா மியவாத கொள்கைக்கு எதிராக செயற்படுவதாகவும் அதற்கு எதிராக வன்முறைகளை தவிர்த்து ஜனநாயக வழியில் செயற்பட வேண்டும் என்றும் ரொபின்சன் குறிப்பிட்டுள்ளார்.

இ. டி. எல். அமைப்பில் இருந்து ஏற்கனவே பல தலைவர்களும் வெளியேறிய போதும் அது தொடர்ந்தும் செயற்படும் என அதன் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team