பிரிட்டன் உட்பட பல நாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை. - Sri Lanka Muslim

பிரிட்டன் உட்பட பல நாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை.

Contributors

பிரித்தானியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் 122 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரத்தானியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து குறித்த சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக ஆயிரத்து 996 பேர் பயணித்துள்ளனர்.

இதன்படி குறித்த காலப்பகுதியில் 21 விசேட விமானங்கள் மூலம் ஆயிரத்து 254 பேர் நாடுதிரும்பியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நாடு திரும்பிய அனைவரும் முப்படையினரால் நடாத்திச்செல்லப்படும் சுற்றுலா விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் பல்வேறு தேவைகளின் நிமித்தம் 742 பேர் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team