பிரிட்டன் பிணைக்கதி டேவிட் ஹெய்ன்ஸ் தலையை IS துண்டித்து கொலை - Sri Lanka Muslim

பிரிட்டன் பிணைக்கதி டேவிட் ஹெய்ன்ஸ் தலையை IS துண்டித்து கொலை

Contributors
author image

World News Editorial Team

ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவு படையான ஐ.எஸ். இயக்கம் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி, சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து “இஸ்லாமிய நாடு” என்ற பெயரில் தனி அரசை நடத்தி வருகின்றனர்.

 

இவர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குர்திஷ் படையினர் மீட்க உதவும் வகையில் -IS மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க போர் விமானங்களின் தாக்குதல்களால் IS  பிடியில் இருந்த பல்வேறு நகரங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த IS  அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான ஸ்டீவன் ஸ்காட்லாப் மற்றும் ஜேம்ஸ் போலே ஆகியோர் பிணைக்கதிகளாக பிடித்து அவர்களில் ஸ்காட்லாப்பை தலை துண்டித்து கொன்றனர். தங்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் போலேயும் தலை துண்டித்து கொல்லப்படுவார் என்று IS மிரட்டியிருந்தனர்.

 

சில நாட்களில் போலேயும் தலை துண்டித்து கொல்லப்பட்டார். அப்போது தங்களிடம் பிணைக்கைதியாக உள்ள பிரிட்டன் நாட்டை சேர்ந்த டேவிட் ஹெய்ன்ஸ் அடுத்து தலை துண்டிக்கப்படுவார் என IS  தெரிவித்தனர். இந்நிலையில் இன்று ஹெயின்ஸ் தலை துண்டித்து கொல்லப்பட்ட காட்சி வீடியோவில் ஒளிபரப்பாகியுள்ளது. இதன் மூலம் தங்கள் கோர முகத்தை தீவிரவாதிகள் மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டியுள்ளனர். ஹெயின்சின் தலையை துண்டிக்கும் தீவிரவாதி அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தால் இது தான் நடக்கும் என்று எச்சரித்துள்ளான்.

 

சில தினங்களுக்கு முன் தான் ஹெயின்சை விடுவிக்கவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் IS டம் வேண்டுகோள் வைத்தனர். இந்நிலையில் தான் அவர் கொல்லப்பட்டுள்ளார். பாதுகாப்பு நிபுணரான ஹெயின்ஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு சிரியாவில் வேலை செய்தபோது காணாமல் போனார். அவருக்கு 17 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

 

IS இன் அடுத்த குறி அவர்கள் பிடியில் உள்ள பிரிட்டனின் ஆலன் ஹென்னிங் என்று கூறப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team