பிரிந்து நிற்கும் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட வேண்டும்- ஜனநாயக முஸ்லிம் கூட்டமைப்பு » Sri Lanka Muslim

பிரிந்து நிற்கும் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட வேண்டும்- ஜனநாயக முஸ்லிம் கூட்டமைப்பு

furkan

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் நன்நோக்கில் முஸ்லிம் கட்சித் தலைவர்களை ஒற்றுமைப்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளையும் மறுக்கப்படுகின்ற உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஜனநாயக முஸ்லிம் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

முஸ்லிம் சமூகத்திற்கிடையில் பிளவடைந்து காணப்படும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தனித்தனிப் போக்கின் காரணமாகவும், கட்சி சார்ந்த அரசியல் போட்டிகள் காரணமாகவும் சமூகத்தின் தேவைகள் மட்டுமின்றி அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் பின்தங்கிய நிலைக்கு செல்வதை முஸ்லிம் சமூகம் வெறுப்புடன் நோக்கும் நிலைக்கு முஸ்லிம் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அனைத்து முஸ்லிம் கட்சித் தலைவர்களையும் ஒன்றினைக்கும் தேவையேற்பட்டுள்ளதாகவும் காலத்தின் கட்டாயமாகவும் உள்ளது என்பதை தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் மூலமாக இணக்கப்பாடு ஒன்றுடன் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ப்பதற்கான வேலைத்திட்டமாகவும் தமது கொள்கையாகவும் இக் கூட்டமைப்பு பிரகடனம் செய்துள்ளது.

அதுமாத்திரமின்றி இக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எந்தவிதமான அரசியல் பதவிகள் வகிப்பதற்கான வேலைத்திட்டத்தையோ அல்லது எந்த ஒரு காலகட்டத்திலும் எந்தவிதமான தேர்தல்களிலும் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்திருப்பதோடு முஸ்லிம் சமூகத்தின் மறுமலர்ச்சிக்காகவும் அரசியல் ரீதியாக சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை முஸ்லிம் தலைமைகளை ஒன்று படுத்துவதனூடாக பெற்றெடுக்க முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

(ஊடகப்பிரிவு)
ஜனநாயக முஸ்லிம் கூட்டமைப்பு

Web Design by The Design Lanka