பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு இங்கிலாந்து உயர் நீதிமன்றால் ரத்து..! - Sri Lanka Muslim

பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு இங்கிலாந்து உயர் நீதிமன்றால் ரத்து..!

Contributors

லண்டனில் உள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதன்படி, அந்த நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்துச் செய்யப்பட்டு மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ குறித்த குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி பிரித்தானியா உயர் ஸ்தானிகராலயம் முன்னால் விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு கை சைகைகளால் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக பிரித்தானியா வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றினால் வழங்கு தொடரப்பட்டிருந்தது.

2019 ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி அதன் தீர்ப்பினை வழங்கிய நீதிமன்றம், பொது ஒழுங்கு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக அவருக்கு 2400 பவுண்டுகள் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

அதற்கு எதிராக பிரியங்க பிரித்தானியா மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார்.

நேற்றைய தினம் குறித்த மேன்முறையீட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இதன்போது பிரித்தானியா மேல் நீதிமன்றத்தினால் பிரியங்க பெர்னாண்டோ அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team