பிரெஞ்சு கால்பந்து வீரர் நாட்டை விட்டு செல்ல கத்தார் அனுமதி! - Sri Lanka Muslim

பிரெஞ்சு கால்பந்து வீரர் நாட்டை விட்டு செல்ல கத்தார் அனுமதி!

Contributors

-bbc-

பிரெஞ்சு கால்பந்து விளையாட்டு வீரரான , ஸாஹிர் பெலூனிஸுக்கு, இரண்டாண்டுகள் போராட்டத்துக்குப் பின்னர் , கத்தாரை விட்டு வெளியேற எக்சிட் விசா எனப்படும் வெளியேறும் அனுமதி தரப்பட்டிருக்கிறது.

தான் ஆடிய கால்பந்து கிளப்பான, அல்-ஜைஷ் உடன் தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கி குறித்த ஒரு சட்டரீதியான சர்ச்சை தொடர்பாக தான் கத்தாரை விட்டு வெளியேறுவதிலிருந்து தடுக்கப்பட்டதாக ஸாஹிர் பெலூனிஸ் கூறுகிறார்.

இந்த கிளப்புடன் அவருக்கு 2015 வரை ஒப்பந்தம் இருக்கிறது.

இந்த நிலைமையை கண்டிக்கவேண்டிய ஒன்று என்று சர்வதேச தொழில்முறை கால்பந்து விளையாட்டு சம்மேளனப் பிரதிநிதிகள் வர்ணித்தார்கள்.

கத்தாரி சட்டங்களின்படி, வேலைக்கமர்த்தும் நிறுவனங்கள் , குடியேறி வரும் தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேறவிடாமல் தடுக்க முடியும்.

இந்த சட்டம், வேலைக்கமர்த்துபவர்கள், தங்கள் பணியாளர்களை தவறாக நடத்த அனுமதிக்கின்றன என்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

 

Web Design by Srilanka Muslims Web Team