பிறந்து 18 நாட்களேயான சிசுவொன்று, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணம்..! - Sri Lanka Muslim

பிறந்து 18 நாட்களேயான சிசுவொன்று, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணம்..!

Contributors

பிறந்து 18 நாள்களேயான சிசுவொன்று, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளது. இந்த சம்பவம் மினுவங்கொட பீல்லவத்த பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது என மினுவங்கொட சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.

பிறக்கும் போதே அங்கவீனமுற்றிருந்த அந்த சிசு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளது.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட ரேபிட் அன்டிஜன் பரிசோதனையில், அச்சிசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

மரணமடைந்த சிசுவின் தாய், தந்தை ஆகிய இருவருக்கும் ரேபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்விருவருக்கும் எவ்விதமான அறிகுறிகளும் காண்பிக்கவில்லை என்றும் சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

மரணமடைந்த சிசுவின் தாய், தந்தை மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வீட்டுக்குள்​ளே, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team