பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று கொரோனாவினால் நேற்று (05) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது..! - Sri Lanka Muslim

பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று கொரோனாவினால் நேற்று (05) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது..!

Contributors

பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று கொவிட்-19 இனால் நேற்று (05) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது. கொழும்பை சேர்ந்த மேற்படி குழந்தை, லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.


குறித்த சிறுமியின் பெற்றோர் தற்போது தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது உறவினர்கள் குழந்தையின் ஜனாஸாவினை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை 2 மாதங்களுக்கும் மேலாக இறையருளால் எரியூட்டாமல் தடுக்கப்பட்டு பிரேத அறையில் பாதுகாக்கப்பட்ட பல ஜனாஸாக்களும் இன்று ஓட்டமாவடி பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது.


அதன்படி

Horgolla-2

Ogadapola-1

scheme-1

Thihariya-1


குறித்த ஜனாஸாக்கள் எரியூட்டப்படாமல் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட திஹாரிய நலன்புரி அமைப்பு உள்ளிட்ட அத்தனை சமூக ஆர்வலர்களுக்கும் நாட்டு முஸ்லிம்கள் சார்பாக நமது நன்றிகள் உரித்தாகட்டும்.

Web Design by Srilanka Muslims Web Team