பிள்ளை படிக்கானா? பேஷ் புக்கில் இருக்கானா? » Sri Lanka Muslim

பிள்ளை படிக்கானா? பேஷ் புக்கில் இருக்கானா?

educ

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


சஹன் புரியாணி சாப்பாடு விலை கொடுத்து வாங்க
அகம் மகிழ்ந்து ஆயிரங்கள் கொடுப்பார்
மகன் வகுப்பில் நிதியுதவி மாணவரிடம் கேட்டால்
மனித உரிமை மீறுவதாய் கொதிப்பார்.

ஆசிரியர் லேசாக அதட்டினால் போதும்
பேஷ்புக்கில் பேர் போட்டு இழிப்பார்.
நாசமாய்ப் போய் பிள்ளை நடுவீதியில் நிற்பதற்கா
நாடுகிறார் இந்தப் பெற்றோர்?

அரசியல் கூட்டங்களில்
அற்ப விடயங்களில்
தெரு நிறையக் கூடி நின்று ரசிப்பார்.
ஒரு சிலரே வந்து உட்கார்ந்து இருப்பார்
ஊரிலுள்ள பாடசாலைக் கூட்டமெனில்.

பிள்ளை படிக்கானா பேஷ் புக்கில் இருக்கானா
எள்ளளவும் இவர் பார்க்க மாட்டார்
பள்ளிப் பரீட்சையிலே புள்ளி போதாதெனின்
பொல்லாத குறை சொல்வார் பள்ளிக்கு.

பெட்டிஷம் அடிக்கிறார் பேஷ் புக்கில் எழுதுறார்
மொட்டைக் காகிதத்தில் முழுசாய் ஏசுறார்.
விட்டு விட்டு அதிபர் வேறு இடம் போன பின்
பட்டு மாய்கிறது பாடசாலை நிர்வாகம்.

ஒரு சில அதிபர்கள் உதவாத ஆசிரியர்கள்
உண்மையில் ஆங்காங்கு இருப்பினும்
பெரும்பாலும் இங்கு பெற்றோரே பிள்ளையின்
கரும்பான கல்வியைக் கெடுக்கிறார்.

Web Design by The Design Lanka