புகைத்தலில் ஒளிந்திருக்கும் கொவிட் மரணம்..! - Sri Lanka Muslim

புகைத்தலில் ஒளிந்திருக்கும் கொவிட் மரணம்..!

Contributors

புகைபிடிப்பவர்கள் கொவிட் காரணமாக இறக்க அதிக வாய்ப்புள்ளது என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

புகை பிடித்தல் நுரையீரலின் செயற்பாட்டைப் பலவீனப்படுத்துகிறது என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் மருத்துவர் தீபால் பெரோ கூறுகிறார்.

சிகரெட், சுருட்டு அல்லது வேறு எந்த புகை பிடித்தலை மேற்கொள்பவருக்கும் நுரையீரல் செயற்பாடு பலவீனமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இவ்வாறான பழக்கமுள்ளோர் விரைவில் கொவிட் நிமோனியாவைப் பெறுவர் எனவும் அவர் கூறினார்.

புகைப்பவர்களுக்கு அருகில் இருக்கும் சிறுவர்களுக்கும் இதே நிலை ஏற்படலாம்.

இத்தகைய சிறுவர்களுக்கு கடுமையான சிக்கல்களை அல்லது மரணத்தைக் கூட உருவாக்கலாம் என அவர் மேலும் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team