புகையிரதப் பாதைகளில் நடந்துசெல்வோரை கைது செய்ய நடவடிக்கை! - Sri Lanka Muslim

புகையிரதப் பாதைகளில் நடந்துசெல்வோரை கைது செய்ய நடவடிக்கை!

Contributors

அநாவசியமாக புகையிரதப் பாதைகளில் நடந்து செல்வோரை கைது செய்யவுள்ளதுடன் அதற்கான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளதாகவும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத பாதைகளில் அநாவசியமான முறையில் நடந்துசெல்வதால் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் அத்தியட்சகர் எல். கே. ஆர். ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே அநாவசியமான முறையில் புகையிரதப்பாதையில் நடந்து செல்வோரை கைதுசெய்ய பாதுகாப்பு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப் பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் குறித்த சட்டநடைமுறை மேலும் கடுமையாக்கப்படுமெனவும் புகையிரத திணைக்களத்தின் அத்தியட்சகர் எல். கே. ஆர். ரத்னா யக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team