புதிதாக இனங்கானப்பட்ட வைரஸ் தொடர்பாக சுகாதாரத்துறையின் விளக்கம்..! » Sri Lanka Muslim

புதிதாக இனங்கானப்பட்ட வைரஸ் தொடர்பாக சுகாதாரத்துறையின் விளக்கம்..!

Contributors
author image

Editorial Team

நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வகை தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க சுகாதார பிரிவினர் மிகவும் தாமதித்து விட்டதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பரிசோதனை குழு சில நாட்களுக்கு முன்னர் சுகாதார பிரிவுக்கு அறித்திருந்த போதிலும் அவர்கள் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுப்பவில்லை என வைத்தியர் ஷரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

பின்னர் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பரிசோதனை குழுவினால் நேற்று (26) இதனை மக்களுக்கு அறிவித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இனங்காணப்பட்ட வைரஸ் வேகமாக பரவக்கூடியதாக கண்டறிப்பட்டுள்ளதால் அதி தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team